அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வால் பையன் என்ற எங்கள் வலைபூ தளம் 
இனி சுட்டிபையன் என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யபடுகிறது.
                         WELCOME TO SUTTIPAIYAN.BLOGSPOT.COM


 மேஷம்:
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
 
ரிஷபம்:
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.
 
மிதுனம்:
சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
 
கடகம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
 
சிம்மம்:
சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போங்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
 
கன்னி:
உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.
 
துலாம்:
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
 
விருச்சிகம்:
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.
 
தனுசு:
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
 
மகரம்:
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். வெற்றிக்கு வித்திடும் நாள்.
 
கும்பம்:
கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வர வேண்டிய பணம் வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
 
மீனம்:
ராசிக்குள் சந்திரன் செல்வதால் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன்,மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத் யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்


                                                                             3.7.2010,
                                                                    விக்ருதி வருடம்;
                                                 ஆனி மாதம் 19ம் நாள், சனிக் கிழமை,
தேய்பிறை. சப்தமி திதி மாலை மணி 5.07 வரை; பிறகு அஷ்டமி திதி. மரணயோகமுடைய கீழ்நோக்குள்ள பூரட்டாதி நட்சத்திரம் மதியம் மணி 12.38 வரை; பிறகு சித்தயோகமுடைய மேல்நோக்குள்ள உத்திரட்டாதி நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள நாள். 
ராகுகாலம்: 9.00 to 10.30
எமகண்டம்:1.30 to 3.00
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும் 
சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களையும், புதிய முயற்சிகளையும் 
தவிர்க்கவும் . 
நல்ல நேரம்:
காலை மணி 7.00 to 8.00, 10.30 to 1.00, மாலை 5.00 to 8.00, இரவு 9.00 to 10.00 மணி வரை.
பொதுப் பலன்:
பழைய கடன் தீர்க்க, நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்க நன்று.


 இந்தியாவைபொறுத்தவரை எந்த அரசியல் பிரச்னை என்றாலும் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தான். எல்லா பாரத்தையும் தாங்கும் சுமைதாங்கி கல் பொதுஜனம். இப்போது பந்த் மிரட்டுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஏழு கூட்டணிக் கட்சிகள் ஜூலை 5ல் பந்த் நடத்தப் போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
ஜனநாயகத்தில் அரசியல் கட்சிளுக்கு எதிர்ப்பை காட்டும் வடிவமாக பந்த் உள்ளது. இதனால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை கட்சிகள் சிறிதும் நினைத்துப் பார்ப்பதில்லை. பந்த் வெற்றி, அதன் தொடர்ச்சியான அரசியல் வளர்ச்சி இவை மட்டுமே அவர்களின் கண்களுக்கு தெரியும்.
முழு அடைப்பு நாளில் பல்வேறு விதங்களில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தொடர்ச்சியாக பந்த்தை பார்த்து அலுத்த மாநிலம் நமது பக்கத்தில் உள்ள கேரளம். அடிக்கடி நடக்கும் பந்த்துக்கு பழகிப்போய், யார் அழைப்பு விடுத்தாலும் கடையை பூட்டி விடும் நிலைமை. சட்டசபையில் ஒரு சீட் கூட இல்லாத பாரதிய ஜனதா பந்த் என்று சொன்னாலும் அங்கே மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்து விடும்.
விளைவு, அங்கே பந்த்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து விட்டது. ஆனாலும் என்ன? பந்த் தொடர்ந்து நடக்கத்தான் செய்கிறது. பெயர் மட்டும் ‘ஹர்த்தால்’ என்று இருக்கும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஜூன் 25 நள்ளிரவு அமலுக்கு வந்தது. அடுத்த நாள் காலை கேரளாவில் முழு அடைப்பும் மேற்கு வங்கத்தில் 24 மணி நேர போக்குவரத்து ஸ்டிரைக்கும் நடந்தது. முன்னறிவுப்பு ஏதுமின்றி திடுதிப்பென்று நடந்த இந்த ஸ்டிரைக்கால் மக்கள் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு, பள்ளிகளுக்கு திடீர் லீவ், வாகனங்கள் ஓடாததால் வெளியூர் பயணிகள் தெருவில் திண்டாட்டம், அரசு பஸ்கள் மீது கல்வீச்சு என மாநிலத்தின் சகஜ வாழ்வு குலைந்து போனது.
5ம் தேதி பந்த்தில் யாராவது வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பந்த் நடத்துவதால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை, நஷ்டம்தான். ஆனாலும் இந்த சடங்கு தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கு உருப்படியான ஒரு தீர்வு காண வேண்டும்.


  மேஷம்: 
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். இனிமையான நாள்.
 
ரிஷபம்:
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். சொந்தபந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். புகழ், கௌரவம் கூடும் நாள்.
 
மிதுனம்:
மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.
 
கடகம்:
சந்திராஷ்டமம் இருப்பதால் அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள். 
 
சிம்மம்:
பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.
 
கன்னி:
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கு சாதகமாக திரும்பும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.
 
துலாம்:
குடும்பத்தில் உங்கள் கை ஒங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.
 
விருச்சிகம்:
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலை அமையும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.
 
தனுசு:
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட் களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
 
மகரம்:
கணவன்,மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமை, கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.
 
 கும்பம்:
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.
 
மீனம்:
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போங்கள். முழங்கால் வலி, கண் எரிச்சல் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


 
                                                                           2.7.2010,    
                                                                 விக்ருதி வருடம்;
                                           ஆனி மாதம் 18ம் நாள், வெள்ளிக் கிழமை,
தேய்பிறை. சஷ்டி திதி மறுநாள் அதிகாலை மணி 3.29 வரை; பிறகு சப்தமி திதி. மேல்நோக்குள்ள சதயம் நட்சத்திரம் காலை மணி 10.14 வரை; பிறகு கீழ்நோக்குள்ள பூரட்டாதி நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சித்தயோக நாள். சஷ்டி விரதம். 
ராகுகாலம்:10.30 to 12.00
எமகண்டம்:3.00 to 4.30
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும் 
சந்திராஷ்டமம்: பூரம் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களையும்,புதிய முயற்சிகளையும் 
தவிர்க்கவும்.
நல்ல நேரம்:
காலை மணி 6.00 to 9.00, மதியம் 1.00 to 3.00, மாலை 5.00 to 6.00, இரவு 8.00 to 10.00 மணி வரை.
பொதுப் பலன்:
திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, குழந்தைக்கு பெயர் சூட்ட, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, வியாபாரம் தொடங்க, புது வேலையில் சேர, வங்கிகளில் சேமிப்புக் கணக்குத் தொடங்க, தாலிக்குப் பொன் உருக்க, பயணம் தொடங்க நன்று.


மேஷம்:
தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செய ல்படுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.
 
ரிஷபம்:
பழைய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். தாயார் ஆதரித்துப் பேசுவார். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உற்சாகமான நாள்.
 
மிதுனம்:
கடந்தஇரண்டு நாட்களாக இழு பறியாக இருந்த வேலைகள் முடியும். கணவன்,மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். நிம்மதியான நாள்.
 
கடகம்:
சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில்போய் முடியும். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். சிக்கனம் தேவைப்படும் நாள்.
 
சிம்மம்:
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
 
கன்னி:
எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அமோகமான நாள்.
 
துலாம்:
புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து யோசிப்பீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.
 
விருச்சிகம்:
உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
 
தனுசு:
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும். வெற்றி பெறும் நாள்.
 
மகரம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
 
கும்பம்:
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். சதயம் நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.
 
மீனம்:
பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். திடீர் பயணங்களும், செலவுகளும் வந்துப் போகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


1.7.2010,
விக்ருதி வருடம்,
ஆனி மாதம் 17ம் நாள், வியாழக்கிழமை,
தேய்பிறை. பஞ்சமி திதி நள்ளிரவு மணி 1.38 வரை; பிறகு சஷ்டி திதி. சித்தயோகமுடைய அவிட்டம் நட்சத்திரம் காலை மணி 7.42 வரை; பிறகு மரணயோகமுடைய சதயம் நட்சத்திரம். நேத்திரமுள்ள, ஜீவனற்ற மேல்நோக்கு நாள். 
ராகுகாலம்:1.30 to 3.00
எமகண்டம்:6.00 to 7.30
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும் 
சந்திராஷ்டமம்: மகம் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களையும்,புதிய முயற்சிகளையும் 
தவிர்க்கவும்.
நல்ல நேரம்:காலை
மணி 9.00 to 12.00, மாலை 4.00 to 7.00, இரவு 8.00 to 9.00 மணி வரை.
பொதுப் பலன்:
பழைய வாகனம் விற்க நன்று.


 மேஷம்:
பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பணம் வரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புகழ், கௌரவம் கூடும் நாள்.
 
ரிஷபம்:
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பங்குதாரர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.
 
மிதுனம்:மாலைமணி 6.20 வரை சந்திராஷ்டமம் தொடர்ந்தாலும் தடைபட்ட வேலைகளை விடா முயற்சியால் முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
 
கடகம்:
கணவன்,மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துபோகும். பூர்வீகச் சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மாலை மணி 6.20 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
 
சிம்மம்:உணர்ச்சிகளைகட்டுப்படுத்தி உயர் வதற்கான வழியை யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் சில மாற்ற ங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
 
கன்னி:
பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் நிர்வாகத்திறமை வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.
 
துலாம்:
நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப் பீர்கள்.பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர்கள். பிரார்த்தனைகள் நிறைவேறும் நாள்.
 
விருச்சிகம்:
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். கணவன்,மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.
 
தனுசு:
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.
 
மகரம்:
மாலை மணி 6.20 வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.
 
கும்பம்:
கணவன்,மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். மாலை மணி 6.20 முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் நிதானம் தேவைப்படும் நாள்.
 
மீனம்:நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்பு, மரியாதை கூடும் நாள்.


 30.6.2010,
விக்ருதி வருடம்,
ஆனி மாதம் 16ம் நாள், புதன்கிழமை,
தேய்பிறை. சதுர்த்தி திதி இரவு மணி 11.41 வரை; பிறகு பஞ்சமி திதி. மேல்நோக்குள்ள அவிட்டம் நட்சத்திரம் நாள் முழுவதும். நேத்திரம், ஜீவனுள்ள மரணயோக நாள். சதுர்த்தி விரதம். 
ராகுகாலம்: 12.00 to 1.30
எமகண்டம்: 7.30 to 9.00
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும் 
சந்திராஷ்டமம்: ஆயில்யம் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களையும், புதிய முயற்சிகளையும் 
தவிர்க்கவும்.
நல்ல நேரம்:
காலை மணி 6.00 to 7.30, முற்பகல் 9.00 to 10.00, பிற்பகல் 11.30 to3.00, மாலை 4.00 to 5.00 , இரவு 7.00 to 10.00 மணி வரை.
பொதுப் பலன்:
ரத்த தானம் செய்ய, பழைய நண்பர்கள், உறவினர்களை சந்திக்க நன்று.


 மேஷம்:
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.
 
ரிஷபம்:
கடந்த இரண்டு நாட்களாக கணவன்,மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
 
மிதுனம்:   சந்திராஷ்டமம்தொடங்குவதால் சிலர் உங்களை விமர்சிப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
 
கடகம்:
பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்து பேசுவார். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
 
சிம்மம்:குடும்பத்தினர்உங்கள் ஆலோசனையை ஏற்பர். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.
 
கன்னி:
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.
 
துலாம்:
உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
 
விருச்சிகம்:
பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
 
தனுசு:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த முன்கோபம், காரியத் தாமதம், வாக்குவாதம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
 
மகரம்:
ராசிக்குள் சந்திரன் செல்வதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. சிக்கனமாக இருங்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
 
கும்பம்:
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் வீண் செலவும், மனக்கசப்பும் வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
 
மீனம்:
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்க ங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


 
விக்ருதி வருடம்,
ஆனி மாதம் 14ம் நாள், திங்கட்கிழமை,
தேய்பிறை. துவியை திதி இரவு மணி 8.04 வரை; பிறகு திருதியை திதி. மரணயோகமுடைய உத்திராடம் நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு மணி 2.44 வரை; பிறகு, அமிர்தயோகமுடைய திருவோணம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள மேல்நோக்கு நாள்.
 ராகுகாலம்:7.30 to 9.00
எமகண்டம்:10.30 to 12.00
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் விலக்கவும் 
சந்திராஷ்டமம்: திருவாதிரை , புனர்பூசம் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களையும், புதிய முயற்ச்சிகளையும் 
தவிர்க்கவும்.
நல்ல நேரம்:
காலை காலை மணி 6.00 to 7.00, முற்பகல் 9.00 to 10.30, மதியம் 1.00 to 2.00, மாலை 3.00 to 4.00, இரவு 6.00 to 9.00 மணி வரை.
பொதுப் பலன்:
வாகனம் வாங்க நன்று.


  பெட்ரோல் மற்றும் டீஸல் விலை உயர்வு வரும்.. ஆனால் வராது.. என்று பல மாதங்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த புலி வந்துவிட்டது. பெட்ரோலிய பொருட்களின் விலைகளை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மூன்றரை ரூபாய் அதிகரிக்கிறது.
‘பைக் வைத்திருப்பவருக்கு மாதம் 35 ரூபாயும், கார் என்றால் 150 ரூபாயும் கூடுதலாக செலவாகும்; அவ்வளவுதான்’ என்று பெட்ரோலிய துறை செயலாளர் அப்பாவி பாவனையுடன் விளக்கியது சுவாரசியம். டூவீலர் என்றால் 10 லிட்டர், காரில் செல்வோர் 40 லிட்டரில் மாதத்தை ஓட்டுகின்றனர் என்பது அவர் கணக்கு. அது உண்மையாக இருக்குமானால் யாரும் கலங்கப் போவதில்லை. விலையில் பாதி வரிகள் என்ற நியதி மாறாதவரை, நடப்பதற்கு தரும் ஊக்கத்தொகைதான் விலை உயர்வு.
டீசல் 2 ரூபாய் அதிகரிப்பது நிச்சயம் பாதிக்கும். பஸ், லாரி போக்குவரத்து டீசலை நம்பி இருப்பதால் கட்டணங்கள் உயர்ந்து அதனால் பொருட்களின் விலையும் உயரும். அடக்க விலையை விட ரூ.3.80 குறைத்து டீசல் விற்கப்பட்டது. நேற்றைய உயர்வால் நஷ்டம் 1.80 ஆக குறையும். சீக்கிரமே இதையும் பெட்ரோல் போல சந்தை விலையுடன் இணைத்துவிட அரசு முடிவு செய்திருக்கிறது. அதாவது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறினால் இதுவும் ஏறும்; அங்கே குறைந்தால் இங்கும் அதே.
அரசே விலை நிர்ணயிப்பதால் எண்ணெய் கம்பெனிகளுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி மானியமாக கொடுக்கிறது. ஒரு லிட்டர் கெரசினுக்கு ரூ.18.12, ஒரு சிலிண்டர் எல்.பி.ஜி.க்கு ரூ.261.90 மானியம். இரண்டும் நடுத்தர, ஏழை மக்கள் பயன்படுத்துவது என்பதால் இவற்றின் விலையை இப்போதைக்கு சந்தையுடன் இணைக்கும் உத்தேசம் கிடையாதாம். எட்டு வருடமாக கெரசின் விலை மாறவில்லை. முறையே ரூ.3, ரூ.35 கூடுவதால் அரசின் இழப்பு கணிசமாக குறைந்துவிடாது. இலக்கை நோக்கிய முதல் அடி இது.
ஏழைகளை பாதுகாக்க திட்டமிட்டு அறிமுகம் செய்த மானியங்கள் மற்றவர்களுக்கு பயன்படுவதே அதிகம். டீசல் கார்களும், ஜெனரேட்டர்களும் சாட்சி. நிர்வாக சீர்திருத்தத்திலும் கவனம் செலுத்த அரசு தீர்மானித்தால், இந்த நடவடிக்கையால் நல்ல பலன்கள் கிடைக்கும்.


 
மேஷம்:   
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், காரியத் தடை நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
 
ரிஷபம்:
சந்திராஷ்டமம் தொடர்வதால் திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். கணவன்,மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். தாணுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.
 
மிதுனம்:
உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
 
கடகம்:
எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.
 
சிம்மம்:
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.
 
கன்னி:
சகோதர வகையில் நன்மை உண்டு. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
 
துலாம்:
துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.
 
விருச்சிகம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவன்,மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மகிழ்ச்சி தங்கும் நாள்.
 
தனுசு:
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.
 
மகரம்:
எதிர்பார்த்த வேலைகள் தாமதமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வாகனம் பழுதாகும். கடன் தொந்தரவுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.
 
கும்பம்:
உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மதிப்பு, மரியாதைக் கூடும் நாள்.
 
மீனம்:
கணவன்,மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வரும். புது பொருள் சேரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.


 
 
26.6.2010, 
விக்ருதி வருடம்,
ஆனி
மாதம் 12ம் நாள்,
சனிக் கிழமை,
வளர்பிறை. பௌர்ணமி திதி மாலை மணி 5.47 வரை; பிறகு தேய்பிறை பிரதமை திதி. மூலம் நட்சத்திரம் இரவு மணி 10.57 வரை; பிறகு, பூராடம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சித்தயோகமுடைய கீழ்நோக்கு நாள். பௌர்ணமி விரதம். 
ராகுகாலம்:9.00 to 10.30
எமகண்டம்:1.30 to 3.00
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும் 
சந்திராஷ்டமம்: ரோகிணி,மிருகசீரிடம் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களையும்,புதிய முயற்சிகளையும் 
தவிர்க்கவும்.
நல்ல நேரம்:
காலை மணி 7.00 to 8.00, பிற்பகல் 10.30 to 1.00, மாலை 5.00 to 8.00, இரவு 9.00 to 10.00 மணி வரை. 
பொதுப் பலன்:
நோயுற்றோர் மருந்துண்ண, விதை விதைக்க, பயணம் தொடங்க நன்று.

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget